வ.உ.சி. உயிரியியல் பூங்காவில் விலங்குகளுக்கு உடல் நல பரிசோதனை மேற்கொள்ள திட்டம்

கோவை, மே 27: கோவை வ.உ.சி. உயிரியல் பூங்கா அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு மூடப்பட்டுள்ள நிலையில், விலங்குகளுக்கு உடல் நல பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளன. கோவையின் அடையாளங்களில் ஒன்றாக மாநகராட்சி வ.உ.சி. உயிரியல் பூங்கா உள்ளது. கடந்த 1965-ம் ஆண்டு இப்பூங்கா உருவாக்கப்பட்டது. ஊர்வன, பறப்பன, பாலூட்டிகள் என 40 இனங்களில் 532 விலங்கினங்கள் வரை உயிரியல் பூங்காவில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன. நாள்தோறும் 300 முதல் 350 பேர் வார நாட்களிலும், 1500 முதல் 2000 பேர் வரை விடுமுறை நாட்களிலும் வந்து சென்றனர்.

இதனிடையே, பூங்கா மற்றும் விலங்கினங்களின் பராமரிப்பு விவகாரத்தில் பல்வேறு குறைபாடுகள் காரணமாக ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாறுபாடு துறையின் கீழ் செயல்படும் ஒன்றிய உயிரியல் பூங்கா ஆணையம் கோவை மாநகராட்சி உயிரியல் பூங்காவுக்கான அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளது. இதனால், வ.உ.சி. உயிரியல் பூங்கா மூடப்பட்டுள்ளது. மக்கள் பூங்காவிற்குள் அனுமதிக்கப்படுவதில்லை. இதனிடையே பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு உடல் நல பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கோவை வ.உ.சி. உயிரியல் பூங்கா பறவைகள் பூங்காவாக மாற்றப்படும். தற்போது உயிரியியல் பூங்காவில் உள்ள பாம்பு, முதலைகள், மான்கள் போன்ற உயிரினங்களுக்கு உடல் நல பரிசோதனை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். அதன் பின்னர் சென்னை வண்டலூர் பூங்காவிற்கு மாற்றும் நடவடிக்கை விரைவில் துவங்க உள்ளது’’ என்றார்.

The post வ.உ.சி. உயிரியியல் பூங்காவில் விலங்குகளுக்கு உடல் நல பரிசோதனை மேற்கொள்ள திட்டம் appeared first on Dinakaran.

Related Stories: