கூடலூர் நகராட்சியில் காலை உணவு திட்ட சமையல் கூடம்

பெ.நா.பாளையம், மே 27: கோவை மாவட்டம் கூடலூர் நகராட்சியில் ரூ.2.62 கோடியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை நீலகிரி எம்பி ஆ.ராசா பார்வையிட்டு ஆய்வு செய்தார். 2022-23ம் ஆண்டுக்கான 15, 16, 20, 26 வது வார்டுக்குட்பட்ட பல பகுதிகளில் ரூ.2.62 கேடியில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் மற்றும் 26வது வார்டு தெற்கு பாளையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள முதல்வரின் காலை உணவு திட்டத்தின் சமையல் கூடத்தை அவர் ஆய்வு செய்தார். வரும் 3ம் தேதி கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் காலை உணவு திட்டத்தை சென்னையில் தொடங்கி வைக்கிறார். கூடலூர் நகராட்சியில் 10 மற்றும் பெரியநாயக்கன்பாளையத்தில் 3 என மொத்தம் 13 அரசு பள்ளிகளை சேர்ந்த 900 மாணவ, மாணவியருக்கு இந்த சமையல் கூடத்தில் சமைத்து பள்ளிகளுக்கு காலை 8 மணிக்குள் வாகனங்கள் மூலம் எடுத்து சென்று அந்தந்த பள்ளிகளில் நேரடியாக விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ஆயத்த பணிகளை ஆய்வு செய்த எம்.பி. ஆ.ராசா, நகராட்சி தலைவர் அறிவரசு உள்ளிட்டோர் நிர்வாகத்தினரை பாராட்டினர். இந்நிகழ்ச்சியில், ஆணையாளர் பால்ராஜ், துணைத்தலைவர் ரதிராஜேந்திரன், பொறியாளர் கவிதா, காரமடை கிழக்கு ஒன்றிய செயலாளார் கல்யாணசுந்தரம், கவுன்சிலர்கள் கீர்த்தனா, ரேவதி, மணிமேகலை, சித்ரா, முருகானந்தம். துறை செந்தில்குமார், பாலசுப்பிரமணியம், ஜனார்த்தனன், நிர்வாகிகள் அந்தோணிராஜ், வக்கீல் பிரபு, பால்சந்த், விஷ்ணு பிரியா, ரமேஷ், கோகிலாமணி, உதயகுமார்.தங்கராஜ், முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post கூடலூர் நகராட்சியில் காலை உணவு திட்ட சமையல் கூடம் appeared first on Dinakaran.

Related Stories: