எக்ஸ்பல்ஸ் 200 4வி

ஹீரோ மோட்டார் கார்ப்பொரேஷன், புதிய மேம்படுத்தப்பட்ட எக்ஸ்பல்ஸ் 200 4வி பைக்கை அறிமுகம் செய்துள்ளது. தோற்றத்தை பொறுத்தவரை, புதிய எல்இடி ஹெட்லைட் பொருத்தப்பட்டுள்ளது. இது முன்பை விட பிரகாசமானதாக உள்ளது. இதுதவிர, 60 மி.மீ உயர விண்ட் ஸ்கிரீன், ஸ்விட்ச்கியர், பெரிய ஹேண்ட் கார்டு ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இதில் உள் 200 சிசி ஆயில் கூல்டு இன்ஜின், புதிய விதிமுறைகளுக்கு ஏற்ப 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், வாகனத்தில் பழுது ஏற்பட்டால் எச்சரிக்கும் தொழில் நுட்பமும் இடம் பெற்றுள்ளது. ஷோரூம் விலையாக சுமார் ரூ.1.44 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் ரேலி எடிஷன் தற்போது ‘புரோ வேரியண்ட்’ என மாற்றப்பட்டுள்ளது. இதன் ஷோரூம் விலை சுமார் ரூ.1.51 லட்சம்.

The post எக்ஸ்பல்ஸ் 200 4வி appeared first on Dinakaran.

Related Stories: