தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க மோசடி வழக்கில் முன்னாள் முதுநிலை எழுத்தருக்கு 3 ஆண்டு சிறை

கோவை, மே 26: கோவை எஸ்.எஸ்.குளம் அருகேயுள்ள காட்டம்பட்டியில் வரதையம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இங்கு மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து கடந்த 2005-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8-ம் தேதி கோவை மாவட்ட வணிக குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இதில் ரூ.35 லட்சத்து 21 ஆயிரத்து 165 மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது. இதை தொடர்ந்து அந்த சங்கத்தின் முன்னாள் செயலாளர் சண்முகசுந்தரம், முன்னாள் முதுநிலை எழுத்தர் பிரபாகரன், முன்னாள் கணக்காளர் நாகரத்தினம் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு கோவையில் உள்ள 4-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. அப்போது முன்னாள் செயலாளர் சண்முகசுந்தரம் உயிரிழந்ததால் அவரது பெயர் இந்த வழக்கில் இருந்து நீக்கப்பட்டது. இந்நிலையில், வழக்கு விசாரணை முடிந்த நிலையில், நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி, குற்றம் சாட்டப்பட்ட பிரபாகரனுக்கு 3 ஆண்டு சிறையும், ரூ.8 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனையும் விதித்து நிதிபதி சரவணபாபு தீர்ப்பு வழங்கினார். நாகரத்தினம் மீது குற்றம் நிரூபிக்கப்படாததால் அவர் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

The post தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க மோசடி வழக்கில் முன்னாள் முதுநிலை எழுத்தருக்கு 3 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Related Stories: