குண்டடம்-கோவை 4 வழிச்சாலை நடைபாதையில் திடீர் பள்ளம்

தாராபுரம், மே 26: குண்டடம்- கோவை 4 வழிச்சாலை பணிகள் முடிவடைந்து சில மாதங்களிலேயே, சாலையோரத்தில் அமைக்கப்பட்ட நடைபாதை கற்கள் பெயர்ந்து விழுந்து திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த கோவை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில், பல்லடம் முதல் குண்டடம் வரை 4 வழிச்சாலையாக மாற்றும் பணிகள் தொடங்கப்பட்டு, வே.கள்ளிப்பாளையம் முதல் குண்டடம் வரை பணி நிறைவடைந்து விட்டன. இந்நிலையில், மேட்டுக்கடை அடுத்துள்ள ஒத்தக்கடை பகுதியில் மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. மழைநீர் கால்வாய்க்கும், தார் சாலைக்கும் இடையில் உள்ள நடைபாதையில் கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. இது முடிவடையும் இடங்களில் கான்கிரீட் சுவர் அமைத்தால் தான் பாதிப்பில்லாமல் இருக்கும். ஆனால், பார்க்கிங் டைல்ஸ் முடியும் இடங்களில் சுவர் இல்லாமல் வெறுமனே விட்டுவிட்டதால், தற்போது பெய்த மழையில் மண் அரிப்பு ஏற்பட்டு பார்க்கிங் டைல்ஸ் கற்கள் கீழே விழுந்து சாலையோரம் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். எனவே, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து முறையாக பார்க்கிங் டைல்ஸ் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post குண்டடம்-கோவை 4 வழிச்சாலை நடைபாதையில் திடீர் பள்ளம் appeared first on Dinakaran.

Related Stories: