வேதகாலத்திலிருந்தே இந்தியா அறிவார்ந்த சமூகமாக இருந்தது: இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேட்டி

உஜ்ஜைனி: வேதகாலத்திலிருந்தே இந்தியா ஒரு அறிவார்ந்த சமூகமாக இருந்தது என இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் தெரிவித்துள்ளார். மத்தியபிரதேசம் உஜ்ஜைனியில் உள்ள மகரிஷி பானினி சமஸ்கிருத மற்றும் வேதபல்கலைக் கழகத்தின் 4வது பட்டமளிப்பு விழாவில் இஸ்ரோ தலைவர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

பின்னர் பேசிய அவர், “இந்திய கணிதம், கட்டுமான கலைகள், உலோக அறிவியல், வானியல் அறிவியல் உள்பட அனைத்திலும் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட வேதங்களே முன்னோடியாக இருந்தன. ஆனால் அவை பின்னாளில் ஆங்கிலேயர்களின் கண்டுபிடிப்புகள் என்ற பெயரில் இந்தியாவுக்கு திரும்பி வந்தன. அறிவியல் கோட்பாடுகளின் உண்மையான பிறப்பிடமே வேதங்கள் தான். வேத காலத்திலிருந்தே இந்தியா அறிவார்ந்த சமூகமாக இருந்துள்ளது. சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட இந்திய இலக்கியங்கள் வளம் மிக்கவை” என்று தெரிவித்தார்.

The post வேதகாலத்திலிருந்தே இந்தியா அறிவார்ந்த சமூகமாக இருந்தது: இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: