ஆலங்குடி அருகே சேவுகம்பட்டியில் ஜல்லிக்கட்டு: சீறி பாய்ந்த 800 காளைகளுடன் மல்லுக்கட்டிய வீரர்கள்

ஆலங்குடி: ஆலங்குடி அருகே சேவுகம்பட்டியில் இன்று காலை நடந்த ஜல்லிக்கட்டில் 800 காளைகளுடன் 250 வீரர்கள் மல்லுக்கட்டினர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள சேவுகம்பட்டி காளியம்மன் கோயில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. மதுரை, சிவகங்கை, பரமக்குடி, தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களிலிருந்து சுமார் 800 காளைகள், 250 வீரர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக காகைள், வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது. தொடர்ந்து கோயில் திடலில் நடைபெற்ற போட்டியில் டிஆர்ஓ முருகேசன் ஜல்லிக்கட்டுக்கான உறுதிமொழி வாசிக்க வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

இதைதொடர்ந்து காலை 8.30 மணிக்கு துவங்கிய போட்டியை புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா துவக்கி வைத்தார். வாடிவாசல் வழியே முதலில் கோயில் காளையும், தொடர்ந்து மற்ற காளைகளும் அடுத்தடுத்து அவிழ்த்துவிடப்பட்டனர. ஜல்லிக்கட்டில் சீறி பாய்ந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டி அடக்கி வருகின்றனர். காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் ரொக்கம் மற்றும் வெள்ளி காசுகள், மின்விசிறி, எவர் சில்வர் பாத்திரங்கள், ஹெல்மெட், அண்டா உட்பட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும் ரொக்க பரிசுகளும் வழங்கப்பட்டன. புதுக்கோட்டை டிஎஸ்பி செல்வம் தலைமையில் 180 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

The post ஆலங்குடி அருகே சேவுகம்பட்டியில் ஜல்லிக்கட்டு: சீறி பாய்ந்த 800 காளைகளுடன் மல்லுக்கட்டிய வீரர்கள் appeared first on Dinakaran.

Related Stories: