தொழிலாளர் உறுப்பினர் பதிவு முகாம்

 

மதுரை, மே 25: மதுரையில் தமிழக கட்டிட தொழிலாளர்கள், தமிழ்நாடு அமைப்பு சாரா மத்திய தொழிலாளர் சங்கம் சார்பில் தொழிலாளர்களுக்கான இலவச உறுப்பினர் பதிவு முகாம் நடந்தது. இதற்கு அமைப்புசாரா தொழிலாளர் சங்க செயலாளர் வீரக்குமார், விவசாய தொழிலாளர்கள் கட்சி செயலாளர் ஞானசேகரன் ஆகியோர் தலைமை வகித்தனர். கட்டிட தொழிலாளர்கள் சங்க செயலாளர் பிச்சைபாண்டி, நிர்வாகி பழனி முன்னிலை வகித்தனர். மாநில இணை பொதுச் செயலாளர் சமயசெல்வம், மகளிர் அணி தலைவர் மேகலா, செயலாளர் வடிவுராணி, துணைத் தலைவர் பவித்ரா, நிர்வாகிகள் முருகேசன், செல்வம், ராஜகுரு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

The post தொழிலாளர் உறுப்பினர் பதிவு முகாம் appeared first on Dinakaran.

Related Stories: