உக்கடம் பஸ் ஸ்டாண்டிற்குள் விதிமீறல்

கோவை, மே 25: கோவை உக்கடம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் மேம்பால பணிகள் நடக்கிறது. வாகன போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்ட நிலையில் இங்கே விதிமுறை மீறல்கள் அதிகமாகிவிட்டது. பஸ் ஸ்டாண்டிற்குள் ஆட்டோக்கள், சரக்கு வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சில பிளாட்பார கடைகளும் துவக்கப்பட்டுள்ளன. பஸ் ஸ்டாண்டிற்குள் பஸ்கள் செல்லவும், பஸ்கள் வெளியே வரவும் முடியாத அளவிற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் பஸ் திரும்ப முடியாத அளவிற்கு மண் குவித்து வைத்துள்ளனர். சிலர் இரு சக்கர வாகனங்களை பஸ் ஸ்டாண்டிற்குள் நிறுத்தி வைப்பதும் ஓட்டி செல்வதும் வாடிக்கையாகிவிட்டது.

The post உக்கடம் பஸ் ஸ்டாண்டிற்குள் விதிமீறல் appeared first on Dinakaran.

Related Stories: