நல்லாம்பாளையத்துக்கு பேருந்துகள் மீண்டும் இயக்கப்படுமா?.. மக்கள் எதிர்பார்ப்பு

 

கோவை, மே 25: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதி நல்லாம்பாளையம். இந்த பகுதி கவுண்டம்பாளையம், மணியகாரன்பாளையம், சங்கனூர் பகுதிக்கு மத்தியில் அமைந்துள்ளது. நல்லாம்பாளையத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. தவிர, ஏராளமான கம்பெனிகள், தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு ஒரே ஒரு மாநகராட்சி துவக்கப்பள்ளி மட்டுமே செயல்பட்டு வருகிறது.

இதனால், இப்பகுதியை சேர்ந்த பெரும்பாலான மாணவர்கள் கணபதி, காந்திபுரம், வெள்ளக்கிணறு, என்ஜிஜிஓ காலனி, துடியலூர், மணியகாரன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் பள்ளிக்கு சென்று படித்து வருகின்றனர். மேலும், மேற்படிப்பு படிக்கும் மாணவர்கள், பல்வேறு நிறுவனங்களுக்கு பணிக்காக செல்பவர்கள் காந்திபுரம், பீளமேடு உள்ளிட்ட பகுதிக்கு சென்று வருகின்றனர். இந்த பகுதியை சேர்ந்தவர்கள் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு சென்று வரவும், பல்வேறு பணிக்காக அதிகளவில் பேருந்துகளை நம்பி உள்ளனர்.

இந்நிலையில், நல்லாம்பாளையம் பகுதிக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அரசு பேருந்து எண் 3 கணபதி, காந்திபுரம், உக்கடம் வழியாக கோவைப்புதூர் வரை இயக்கப்பட்டது. இதே போல் 2சி என்ற அரசு பேருந்து நல்லாம்பாளையத்தில் இருந்து கணபதி, காந்திபுரம், பேரூர் வழியாக பச்சாபாளையம் வரையும், தனியார் பேருந்து 43-ஏ நல்லாம்பாளையம், கணபதி, காந்திபுரம், ரயில்நிலையம், அரசு மருத்துவமனை, சிங்காநல்லூர், நீலிகோணம்பாளையம் வரையும் இயக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 2020-ம் ஆண்டில் கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அரசால் விதிக்கப்பட்டன. அப்போது, அரசு, தனியார் பேருந்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. அப்போது, நல்லாம்பாளையம் பகுதிக்கு இயக்கப்பட்டு வந்த பேருந்துகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

The post நல்லாம்பாளையத்துக்கு பேருந்துகள் மீண்டும் இயக்கப்படுமா?.. மக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: