டெல்லி: நாடாளுமன்ற திறப்பு விழா புறக்கணிப்பு முடிவை எதிர்கட்சிகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பிரகலாஷ் ஜோஷி கோரிக்கை வைத்துள்ளார். பிரதமர் மோடியே நாடாளுமன்ற கட்டடத்தை திறந்து வைப்பார் என உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக கூறியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்த விவகாரத்தை எதிர் கட்சிகள் அரசியலாக்குவதாக குற்றம் சாட்டினார்.
வரும் 28-ம் தேதி திட்டமிட்டப்படி பிரதமர் மோடியே புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறந்து வைப்பார் என்றும் அதையே மக்கள் விரும்புவதாகவும் அமித் ஷா கூறினார். இதனிடையே நாடாளுமன்ற திறப்பு விழா புறக்கணிப்பு முடிவை எதிர்க்கட்சிகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாஷ் ஜோஷி கேட்டுக் கொண்டுள்ளார். இது ஒரு வளற்று நிகழ்வு என்றும், இதில் அரசியல் செய்ய வேண்டாம் என்று ஜோஷி கேட்டுக்கொண்டார்.
The post நாடாளுமன்ற திறப்பு விழா புறக்கணிப்பு முடிவை எதிர்கட்சிகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்: பிரகலாஷ் ஜோஷி கோரிக்கை appeared first on Dinakaran.
