சிறுமியிடம் சில்மிஷம் செய்தவருக்கு போலீஸ் வலை

திட்டக்குடி, மே 24: கடலூர் மாவட்டம் ராமநத்தத்தை அடுத்துள்ள வாகையூர் கிராமத்தை சேர்ந்தவர் மாயவேல் மகன் செந்தில்(43). சம்பவத்தன்று இவர் 9ம் வகுப்பு படிக்கும் சிறுமி அவரது வீட்டில் தனியாக இருந்தபோது, அவரது வீட்டிற்கு சென்று சிறுமியை கட்டி பிடித்து முத்தம் கொடுத்து தவறாக நடக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுமி வீட்டில் அழுது கொண்டே இருந்துள்ளார். இதனை அவரது தந்தை ஏன் அழுது கொண்டே இருக்கிறாய் என கேட்டுள்ளார். அப்போது அந்த சிறுமி நடந்த சம்பவத்தை பற்றி கூறியுள்ளார். இந்நிலையில் அந்த சிறுமி திடீரென அவருடைய வீட்டிற்குள் சென்று கதவை மூடி கொண்டு தூக்கு போட்டு கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து அவரை உறவினர்கள் மீட்டு பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள செந்திலை தேடி வருகின்றனர்.

The post சிறுமியிடம் சில்மிஷம் செய்தவருக்கு போலீஸ் வலை appeared first on Dinakaran.

Related Stories: