சாராயம் பதுக்கி வைத்திருந்தவர் கைது

திண்டிவனம், மே 24: திண்டிவனம் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் இளவழகி தலைமையிலான போலீசார் மரக்காணம் அடுத்த அடசல் கிராமத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அடசல் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த சுப்ராயன் மகன் சிங்காரம்(42), என்பவரது வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டபோது, வீட்டின் பின்புறம் விற்பனைக்காக 125 லிட்டர் விஷ நெடி உள்ள சாராயம் மற்றும் 180 மில்லி லிட்டர் அளவு கொண்ட 10 சாராய பாக்கெட்டுகளை மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார், சிங்காரம் என்பவரை கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post சாராயம் பதுக்கி வைத்திருந்தவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: