திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கு ரூ.300 டிக்கெட் இன்று வெளியீடு

திருமலை: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான ரூ.300 டிக்கெட் இன்று ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கட்டண தரிசன டிக்கெட், அங்க பிரதட்சண டிக்கெட் மற்றும் பல்வேறு சேவா டிக்கெட்டுகள் ஆன்லைனில் மாதந்தோறும் வெளியிடப்படுகிறது. அதன்படி ஜூலை, ஆகஸ்ட் மாதத்திற்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் இன்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.

பக்தர்கள் தங்களுக்கு தேவையான நாளுக்கான டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளுமாறு தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மேலும் https://tirupatibalaji.ap.gov.in/ அல்லது பிளே ஸ்டோரில் TTDevasthanams என்ற தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ மொபைல் செயலியை மட்டும் பயன்படுத்தி டிக்கெட் முன்பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

The post திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கு ரூ.300 டிக்கெட் இன்று வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: