மேட்டுப்பாளையம் வட்டத்தில் இன்று முதல் ஜமாபந்தி துவக்கம்

 

மேட்டுப்பாளையம்,மே23: மேட்டுப்பாளையம் வட்டாரத்திலுள்ள கிராமங்களின் 1432 ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்ப்பாய முகாம் 23, 24, 25, 30 உள்ளிட்ட தேதிகளில் சிறுமுகை சாலையில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. ஜமாபந்தி அதிகாரி கோவை தனி துணை ஆட்சியர்( சமூக பாதுகாப்பு திட்டம் ) சுரேஷ் முன்னிலையில் நடைபெற உள்ள இந்த ஜமாபந்தியில் ஊராட்சி,மின்வாரியம், குடிநீர் வடிகால் வாரியம், நெடுஞ்சாலைத்துறை, வேளாண்மை துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச்சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

முதல் நாளான இன்று காலை 10 மணிக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் கெம்மாரம்பாளையம், தோலம்பாளையம், வெள்ளியங்காடு,காளம்பாளையம் ஊராட்சிகள்,24 ஆம் தேதி மருதூர், காரமடை, பெள்ளாதி, சிக்காரம்பாளையம் ஊராட்சிகள்,25 ஆம் தேதி நெல்லித்துறை, ஓடந்துறை,தேக்கம்பட்டி, சிக்கதாசம்பாளையம், சிறுமுகை, ஜடையம்பாளையம் ஊராட்சிகள் மற்றும் 30ம் தேதி இரும்பறை சின்னக்கள்ளிப்பட்டி, மூடுதுறை, இலுப்பநத்தம், பள்ளேபாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்களும் இந்த ஜமாபந்தியில் கலந்து கொள்ளலாம். எனவே,மேற்கண்ட தேதிகளில் அந்தந்த ஊராட்சி மக்கள் தங்களது கோரிக்கைகள் குறித்த மனுக்களுடன் ஜமாபந்தி கூட்டத்தில் பங்கேற்று பயன்பெறலாம் என மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் சந்திரன் தெரிவித்துள்ளார்.

The post மேட்டுப்பாளையம் வட்டத்தில் இன்று முதல் ஜமாபந்தி துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: