தமிழகத்தில் முதல்முறையாக கோவையில் மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்க 2 பெண் போலீசார் நியமனம்

 

கோவை, மே 23: கோவை மாநகர காவல் துறையில் துப்பறியும் மோப்ப நாய் பிரிவு செயல்பட்டு வருகிறது. இங்கு தற்போது 7 மோப்ப நாய்கள் உள்ளன. புதிதாக பெல்ஜியம் மெலானாய்டு வகையை சேர்ந்த மதனா என்ற பெயரிடப்பட்ட 8 மாதமான மோப்ப நாயும் உள்ளது. இங்கு திண்டுக்கல், பாளையங்கோட்டை உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 10 மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மோப்ப நாயுடன் பயிற்சிக்கு வரும் போலீசார் தங்குவதற்கு இடம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

போலீஸ் மோப்ப நாய் பயிற்சி பிரிவில் ஆண் போலீசார் மட்டுமே மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். தற்போது, தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக கோவை மோப்ப நாய் பிரிவில் பயிற்சி அளிப்பதற்காக கோவை மாநகர ஆயுதப்படை பிரிவில் பணியாற்றும் திருப்பூரை சேர்ந்த கவிப்பிரியா, தேனியை சேர்ந்த பவானி ஆகிய 2 பெண் போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். இதனை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

The post தமிழகத்தில் முதல்முறையாக கோவையில் மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்க 2 பெண் போலீசார் நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: