சவுதியின் முதல் விண்வெளி வீராங்கனை: தனியார் ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்றார்

கேப்கனவெரல்: சவுதி அரேபியாவின் முதல் விண்வெளி வீராங்கனை ராயானா பர்னாவி, வீரர் அலி அல்கர்னி உட்பட 4 பேர் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றனர். விண்வெளி ஆராய்ச்சியில் சவுதி அரேபியா ஈடுபட்டு வருகிறது. சவுதி அரசின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் விண்வெளிக்கு செல்லும் திட்டத்தில் அந்நாட்டின் முதல் பெண் விண்வெளி வீராங்கனை ராயானா பர்னாவி, விமான படை வீரர் அலிகர்னி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களை தவிர நாசாவின் முன்னாள் விண்வெளி வீரர் பெக்திவிட்சன், தொழில் அதிபர் ஜான்ஷோப்னர் ஆகியோரை ஏற்றி கொண்டு ஸ்பேஸ் எக்ஸ் தனியார் ராக்கெட் சர்வதேச விண்வெளி மையத்துக்கு நேற்று சென்றது.

ஆக்சியம் ஸ்பேஸ் ஏஎக்ஸ்-2 திட்டத்தில் அவர்கள் அனுப்பப்பட்டு உள்ளனர். அவர்கள் 10 நாள் சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கி இருப்பார்கள். சவுதி அரேபியாவை சேர்ந்த விண்வெளி வீரர்கள் முதல் முறையாக விண்வெளிக்கு சென்றுள்ளனர். சவுதி அரேபிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் ஸ்டெம்செல் ஆராய்ச்சியாளரான ரய்யானா பர்னாவி, சவுதி விமானப் படையின் போர் விமானி அலி அல்-கர்னி அனுப்பப்பட்டுள்ளனர். பர்னாவி, விண்வெளிக்கு சென்ற முதல் சவுதி பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

The post சவுதியின் முதல் விண்வெளி வீராங்கனை: தனியார் ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்றார் appeared first on Dinakaran.

Related Stories: