புற்றுநோயால் அவதிப்பட்ட முதியவர் கிணற்றில் குதித்து தற்கொலை

 

காரமடை, மே 22: காரமடை – அன்னூர் செல்லும் சாலையில் ஐயப்பன் நகர் பகுதியில் வசித்து வருபவர் கணேசன் (60). இவரது மனைவி நாகரத்தினம் (55). இந்த தம்பதிக்கு இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். கணேசன் தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு புற்றுநோய் இருப்பதை கண்டறிந்தனர். இதனையடுத்து மருந்து, மாத்திரைகளை மட்டும் பெற்றுக்கொண்டு வீட்டிற்கு வந்த அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மது அருந்தும் பழக்கமுடைய கணேசன் நேற்று மது அருந்திவிட்டு படியனூர் பகுதியில் உள்ள தனது நண்பரின் தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது, திடீரென அருகே இருந்த விவசாய கிணற்றில் குதித்துள்ளார். இதில் அவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலின்பேரில் மேட்டுப்பாளையம் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கணேசனின் சடலத்தை மீட்டனர். தொடர்ந்து, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக சடலத்தை அனுப்பி வைத்து காரமடை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post புற்றுநோயால் அவதிப்பட்ட முதியவர் கிணற்றில் குதித்து தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: