மீன்பிடி தடைகால நிவாரணத்தை முன்கூட்டியே வழங்க கோரிக்கை

கடலூர், மே 21: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட மைய குழு கூட்டம் கடலூர் சூரப்பன் நாயக்கன் சாவடி அலுவலகத்தில் நடைபெற்றது. மாநில குழு உறுப்பினர் ரமேஷ் பாபு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உதயகுமார், சுப்பராயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: கடற்கரைப் பகுதியில் உள்ள மீனவர்கள் 61 நாட்கள் மீன் தடை காலத்தில் வருமானமின்றி அவதிப்படுகின்றனர். கடந்த காலத்தில் தடை காலத்திற்கு ரூ.5000, மழை காலத்திற்கு ரூ.5000 என பத்தாயிரம் வழங்கப்பட்டு வந்தது. திராவிட முன்னேற்ற கழக தேர்தல் அறிக்கையில் மீன்பிடி தடைகாலத்தில் ரூ.8000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. எனவே மீன்பிடி தடைகாலத்தில் பயன்படும் வகையில் முன்கூட்டியே தமிழக அரசு ரூ.8000 வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

The post மீன்பிடி தடைகால நிவாரணத்தை முன்கூட்டியே வழங்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: