தந்தை இறந்த நிலையிலும் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி தேர்ச்சி

 

கடலூர், மே 20: கடலூர் திருப்பாதிரிப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொது தேர்வை கடலூர் வண்டிப்பாளையம் பகுதியை சேர்ந்த ஆதிலட்சுமி என்கிற மாணவி எழுதிய போது அவரது தந்தை ரவி உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதனால் மாணவி ஆதிலட்சுமி மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் 10ம் வகுப்பு கணித பாடத் தேர்வு எழுத வேண்டிய ஆதிலட்சுமி தந்தையின் இறப்பால் நிலைகுலைந்து போன நிலையில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தோழிகள் அவருக்கு ஆறுதல் அளித்து தேர்வு எழுதுவதற்கு ஊக்கம் அளித்தனர்.

தந்தை இறந்த நிலையிலும் மாணவி ஆதிலட்சுமி தேர்வு எழுதிவிட்டு பின்னர் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார். இந்நிலையில் நேற்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்வு முடிவுகள் வெளியானது இதில் கணித பாடத்தில் மாணவி ஆதிலட்சுமி 60 மதிப்பெண் பெற்றார். மொத்தத்தில் 271 மதிப்பெண் பெற்றார். ஆசிரியர்கள் மற்றும் உறவினர்கள் ஆதிலட்சுமியை பாராட்டினார். இது குறித்து மாணவி ஆதி லட்சுமி கூறுகையில், தந்தை இறந்த துக்கத்திலும் கணித தேர்வை எழுதினேன். அப்பா என்னை நர்சிங் படிக்க வேண்டும். என அடிக்கடி கூறுவார். எனது தந்தையின் கனவை நிறைவேற்றும் வகையில் நர்சிங் படிப்பேன், என்றார்.

The post தந்தை இறந்த நிலையிலும் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி தேர்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: