வேளாண்மை இடுபொருட்களை மானிய வழங்க உத்தரவு

 

கோவை, மே 20: கோவை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் கா.முத்துலட்சுமி கூறியிருப்பதாவது: கோவை மாவட்டத்தில் வேளாண்மை – உழவர் நலத்துறை கீழ் இந்த நிதியாண்டிற்கு தேவையான இடுபொருட்களை விதை கிராம திட்டம், தேசிய எண்ணெய் வித்துகள் இயக்கம் மற்றும் தேசிய உணவு ஊட்ட சத்து திட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்க உத்தரவு பெறப்பட்டுள்ளது.

பயறுவகை, நிலக்கடலை, சோள விதைகள், உயிர் உரங்கள், பயிர் பாதுகாப்பு மருந்துகள் மற்றும் நுண்ணூட்ட கலவைகள் மானிய விலையில் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் வழங்கப்படுகிறது. விரிவாக்க மையங்களில் இடுபொருட்களின் இருப்பு நிலையினை உழவன் செயலியின் மூலமாக பார்த்துக்கொள்ளலாம். விவசாயிகள் இதனை பயன்படுத்தி பயன்பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post வேளாண்மை இடுபொருட்களை மானிய வழங்க உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: