இந்தியாவில் 1000க்குள் குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு

புதுடெல்லி: இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 1000க்குள் குறைந்துள்ளது. ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று காலை 8 மணி நிலவரப்படி வௌியிட்ட அறிக்கையில், “கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 996 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 10,176 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனால் மொத்த பாதிப்பு 4 கோடியே 49 லட்சத்து 84 ஆயிரத்து 58ஆக உயர்ந்துள்ளது.20 பேர் பலியானதால் மொத்த உயிரிழப்பு 5 லட்சத்து 31 ஆயிரத்து 814ஆக பதிவாகியுள்ளது. குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 44 லட்சத்து 42 ஆயிரத்து 65ஆக அதிகரித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இந்தியாவில் 1000க்குள் குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: