பெங்களூரு: கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை முதல்வராக டி.கே.சிவகுமார் மட்டுமே பதவி வகிப்பார் என காங்கிரஸ் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்காக பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்திக்கு நன்றி. கர்நாடக காங்கிரஸில் பல தலைவர்கள் தகுதியும் திறமையும் வாய்ந்தவர்களாக உள்ளனர். தகுதியான தலைவர்கள் அதிகம் பேர் இருப்பதால் பல்வேறு கட்ட ஆலோசனை நடத்த வேண்டிய சூழல் உள்ளது. கர்நாடகத்தில் காங்கிரஸ் வெற்றிக்காக சித்தராமையா முக்கிய பங்காற்றினார். சித்தராமையா, டி.கே.சிவகுமார் இருவரும் காங்கிரசின் சொத்து.
காங்கிரஸ் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட கட்சி. கருத்து ஒற்றுமை அடைப்படையில் முதல்வர், துணை முதலமைச்சர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா, துணை முதல்வராக டி.கே.சிவகுமார் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் ஒரே நேரத்தில் பதிவி ஏற்றுக்கொள்வார்கள். இருவரிடம் ஒருமித்த கருத்தை எட்டவேண்டும் என்பதற்காகவே தனித்தனியாக பல கட்ட ஆலோசனை நடத்தப்பட்டது. நாளை மறுநாள் பெங்களூரு காண்டிவரா மைதானத்தில் கர்நாடக முதலமைச்சர் பதிவியேற்பு விழா நடைபெற உள்ளது. ஒத்த கருத்துடைய கட்சித் தலைவர்கள் அனைவரும் பதவியேற்பு விழாவுக்கு அழைக்கப்படுவார்கள். பெங்களூருவில் இன்றிரவு 7.30 மணிக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.
The post கர்நாடக முதலமைச்சராகிறார் சித்தராமையா.. துணை முதல்வராக டி.கே.சிவகுமார் மட்டுமே பதவி வகிப்பார்: காங்கிரஸ் தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு appeared first on Dinakaran.
