திருப்பத்தூரில் மக்களை அச்சுறுத்திவரும் இரண்டு காட்டு யானைகளை பிடிக்க மூன்று கும்கி யானைகள் வரவழைப்பு..!!

 

திருப்பத்தூர்: திருப்பத்தூரில் குடியிருப்பு பகுதியில் புகுந்து மக்களை அச்சுறுத்திவரும் இரண்டு காட்டு யானைகளை பிடிக்க மூன்று கும்கி யானைகள் வரவழைக்கபட்டிருக்கின்றன. திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 6 நாட்களாகவே இந்த காட்டுயானைகள் வழிதவறி வந்து ஆந்திர மாநிலம் மல்லானூர் பகுதியில் 2 பேரை கொன்று குவித்தது. அதனை தொடர்ந்து அங்கிருந்து ஆத்தூர்குப்பம், கொத்தூர் காட்டு வழியாக ஆத்தூர்குப்பம், நட்றம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றி திரிந்து 2 நாட்களாக திருப்பத்தூர் பகுதியில் முகமிட்டிருந்தது.

திருப்பத்தூர் பகுதிகளான ஏலகிரி மலை, ஜோலார் பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் முகாமிட்டு நேற்று திருப்பத்தூர் நகரபகுதி குள்ளேயே யானையானது படையெடுக்க தொடங்கியது. யானைகளை பிடிக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொண்ட நிலையில் முயற்சிகள் தோல்வியடைந்தது. இந்த நிலையில் காட்டு யானைகளானது நேற்று இரவு திருப்பத்தூர் நகரப்பகுதிகுள்ளேயே நுழைந்து வீட்ட காரணத்தினால் உடனடியாக இந்த யானைகளை பிடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தற்போது முதுமலை சரணாலயத்தில் இருந்து 3 கும்கியானைகள் வரவழைக்கப்பட்டுள்ளது.

சின்னத்தம்பி, வில்சன், உதயன் ஆகிய மூன்று பிரதியோகமாகிய பயிற்சியளிக்கப்பட்ட யானைகள் வந்துள்ளது. காட்டு யானைகள் திருப்பத்தூர் அடுத்த திப்பசமுத்திரம் என்ற கிராமப்பகுதிகளில் நுழைந்துள்ளது. நகர பகுதியில் இருந்து கிராமத்திற்குள் நுழைந்து அங்குள்ள விவசாய நிலங்களை சேதப்படுத்துகிறது. மேலும் இதற்காக நீலகிரி, ஆணைமலை காப்பகம், ஓசூர் காவேரி காப்பகம் உள்ளிட்ட 3 பகுதிகளிலிருந்து ராஜேஷ் தலைமையில் மருத்துவக்குழு வந்துள்ளது.

மருத்துவக்குழு யானைகள் நிலை எவ்வாறு உள்ளது, அதற்கு உண்டான உணவுகள் உள்ளதா என ஆராய்ந்த பிறகு மயக்க ஊசி செலுத்தி அது மயங்கிய பின்னர் கும்கியானைகள் மூலம் அதனை வாகனங்களில் ஏற்றி அதனை முதுமலை சரணாலயத்திற்கு கொண்டு செல்வதாக வனத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 3 கும்கி யானைகள் வந்திருக்கின்ற காரணத்தினால் திருப்பத்தூர் பகுதில் சுற்றி திரித்த காட்டு யானைகளை பிடித்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில் திருப்பத்தூர் நகரபகுதி மக்கள் உள்ளனர்.

The post திருப்பத்தூரில் மக்களை அச்சுறுத்திவரும் இரண்டு காட்டு யானைகளை பிடிக்க மூன்று கும்கி யானைகள் வரவழைப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: