கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் சீனிவாசராகவ தெருவை சேர்ந்தவர் ஷாமிலா (21). இவர், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று ஷாமிலா தனது வீட்டருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை பைக்கில் பின் தொடர்ந்து வந்த 2 மர்ம நபர்கள் திடீரென அவரிடம் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து ஷாமிலா ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.
The post நர்சிடம் செல்போன் பறிப்பு appeared first on Dinakaran.
