நாடு முழுவதும் ஒரே மாதிரியாக அனைத்து டாக்டர்களுக்கும் தனித்துவ அடையாள எண்: தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவு

புதுடெல்லி: நாடு முழுவதும் அனைத்து பயிற்சி டாக்டர்களும் பொதுவான தனித்துவ அடையாள எண்ணை பதிவு செய்து பெற வேண்டுமென தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் அனைத்து டாக்டர்களுக்கும் பொதுவான தனித்துவ அடையாள எண் வழங்க தேசிய மருத்துவ ஆணையம் முடிவு செய்துள்ளது. மருத்துவ ஆணையத்தின் எதிக்ஸ் மற்றும் மருத்துவ பதிவு வாரியம் (இஎம்ஆர்பி) இந்த அடையாள எண்ணை பராமரிக்கும். இதில் டாக்டரின் பெயர் பதிவு எண், பதிவு செய்த தேதி, பணிபுரியும் மருத்துவமனையின் பெயர், கல்வித் தகுதி, மருத்துவ நிபுணத்துவம், பட்டம் பெற்ற பல்கலைக்கழகம் உள்ளிட்ட தகவல்கள் இடம் பெற்றிருக்கும்.

தேசிய மருத்துவ ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும் இத்தகவல்களை பொதுமக்களும் பார்க்க முடியும். இந்த அடையாள எண் 5 ஆண்டுகளுக்கு செல்லும். பின்னர் அதனை புதுப்பிக்க வேண்டும். பதிவு செய்வதற்கு மட்டுமே கட்டணம். புதுப்பிக்க கட்டணம் கிடையாது. மாநில மருத்துவ கவுன்சில்களில் பதிவு செய்துள்ள அனைத்து டாக்டர்களும் இந்த அடையாள எண்ணை பெற தகுதி உடையவர்கள் என தேசிய மருத்துவ ஆணைய செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post நாடு முழுவதும் ஒரே மாதிரியாக அனைத்து டாக்டர்களுக்கும் தனித்துவ அடையாள எண்: தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: