கொலீஜியம் பற்றிய கருத்து துணை ஜனாதிபதி தன்கர் அமைச்சர் ரிஜிஜூ மீது நடவடிக்கை?: உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை

புதுடெல்லி: கொலீஜியம் குறித்து விமர்சித்த துணை ஜனாதிபதி, ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மும்பை வக்கீல்கள் சங்கம் தாக்கல் செய்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ கொலீஜியம் அமைப்பின் நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று குற்றம் சாட்டியிருந்தார். அதே போல், துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் 1973ல் கேசவானந்த பாரதி வழங்கிய தீர்ப்பு குறித்து கேள்வி எழுப்பினார்.

இவைகளுக்கு கண்டனம் தெரிவித்து மும்பை வக்கீல்கள் சங்கம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மும்பை உயர்நீதிமன்றத்தை அணுகிய போது, இது அரசியலமைப்பு சட்டத்தின் 226வது பிரிவின் கீழ் ரிட் அதிகார வரம்பை செயல்படுத்துவதற்கு பொருத்தமான வழக்கு அல்ல என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது.
மும்பை உயர்நீதிமன்றத்தின் இந்த பிப்ரவரி 9ம் தேதி தீர்ப்பை எதிர்த்து, ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ மற்றும் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மும்பை வக்கீல்கள் சங்கம் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவானது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்கே. கவுல், அசாதுதீன் அமானுல்லா அமர்வில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருப்பதாக உச்சநீதிமன்ற இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கொலீஜியம் பற்றிய கருத்து துணை ஜனாதிபதி தன்கர் அமைச்சர் ரிஜிஜூ மீது நடவடிக்கை?: உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: