கணபதி கே.ஜி மருத்துவ மையத்தில் “ஜெனட்டிக் கிளினிக்’’ திறப்பு

கோவை, மே 14: கோவை கணபதி சத்தி ேராடு சிவானந்தபுரம் பகுதியில் கே.ஜி மருத்துவ மையம் உள்ளது. இதன் வளாகத்தில், “ஜெனட்டிக் கிளினிக்’’ என்னும் பிரத்யேக பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. கே.ஜி மருத்துவமனை தலைவர் டாக்டர் பக்தவத்சலம் திறந்து வைத்து, பரிசோதனை மேற்கொண்டார். விழாவுக்கு, மருத்துவமனை துணை தலைவர் வசந்தி ரகு முன்னிலை வகித்தார். விழாவில் டாக்டர் பக்தவத்சலம் பேசியதாவது:

எந்த குழந்தையாக இருந்தாலும் சரி, அது ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் என்பதே அனைவரது விருப்பம். பிறவி குறைபாடுகளுடன் குழந்தை பிறந்தால் அது, பெற்றோருக்கு பெரும் வருத்தத்தை தருகிறது. சமுதாயத்திலும் அந்த குழந்தையால் பெரிதாக எதுவும் சாதிக்க இயலாது. அதனால், பிறவி குறைபாடுகளுடன் குழந்தை பிறக்கக்கூடாது. கருவில் வளரும்போதே அக்குழந்தை எந்த அளவில் ஆரோக்கியமாக வளர்கிறது என்பதை கண்டறிய இச்சிறப்பு பிரிவு துவக்கப்பட்டுள்ளது. இங்கு மருத்துவர்கள் மட்டுமின்றி, மருத்துவ ஆலோசகர்களும் 24 மணி நேரமும் பணியில் இருக்கிறார்கள். கருவுற்ற தாய்மார்கள் இப்பிரிவில் முறையாக பரிசோதனை செய்துகொள்வது நல்லது.
இவ்வாறு அவர் பேசினார். விழாவில், டாக்டர்கள் ராமகிருஷ்ணன், மனீஷா, மருத்துவ மைய ஆலோசகர் நிஷா மற்றும் பலர் பங்கேற்றனர்.

The post கணபதி கே.ஜி மருத்துவ மையத்தில் “ஜெனட்டிக் கிளினிக்’’ திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: