அரசின் சாதனை விளக்க கூட்டம்

கமுதி, மே 12: கமுதி அருகே புதுக்கோட்டையில் திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கமுதி அருகே புதுக்கோட்டை கிராமத்தில் திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் மத்திய ஒன்றியம் சார்பில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சண்முகநாதன் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் கிழவராஜன், துணைச் செயலாளர் தங்கப்பாண்டி, மாவட்ட பிரதிநிதி நாகமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பரமக்குடி எம்எல்ஏ முருகேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் அகமது நம்பி, திமுக பேச்சாளர் வில்வ சக்திநாதன், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தமிழ்செல்விபோஸ் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். இக்கூட்டத்தில் வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன், தெற்கு ஒன்றிய செயலாளர் மனோகரன்,துணை செயலாளர் அன்னமயில், நீதிராஜன், ஒன்றிய கவுன்சிலர் முத்துக்கிளி, பொருளாளர் செந்தூர்பாண்டி, மாவட்ட பிரதிநிதி முருகேசன் மற்றும் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

The post அரசின் சாதனை விளக்க கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: