ராஜஸ்தான் முதல்வருக்கு தலைவலி ஊழலுக்கு எதிராக பாதயாத்திரை சச்சின் பைலட் தொடங்கினார்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் ஊழலுக்கு எதிரான 5 நாள் பாதயாத்திரையை நேற்று தொடங்கினார். ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் , முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடிக்கிறது. சச்சின் பைலட் அவ்வப்போது கெலாட்டுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். முன்னாள் பாஜ முதல்வர் வசுந்தரா ராஜே ஆட்சியில் நடந்த ஊழல் வழக்குகள் குறித்து விசாரிக்க கோரி சச்சின் பைலட் கடந்த மாதம் ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தார். இந்நிலையில்,ஊழல் புகார்களை விசாரிக்க மாநில அரசை வலியுறுத்தும் வகையில், சச்சின் பைலட் 5 நாள் ஜன சங்கர்ஷ் யாத்திரை என்ற நடைபயணம் மேற்கொள்ளப்போவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். அதன்படி அஜ்மீரில் இருந்து ஜெய்ப்பூர் வரையிலான 125 கிமீ தொலைவுக்கு 5 நாள் பாதயாத்திரையை நேற்று அவர் துவங்கினார். யாத்திரை துவங்கிய பின்னர் அவர் கூறுகையில்,‘‘ இளைஞர்கள் நாட்டின் எதிர்காலம். இந்த யாத்திரை யாருக்கும் எதிரானது அல்ல. ஊழலுக்கு எதிராகவும் இளைஞர்களின் நலன்களை பாதுகாக்கவும் நடத்தப்படுகிறது’’ என்றார்.

* கட்சிக்கு விசுவாசம் முக்கியம்: கெலாட்
சச்சின் யாத்திரை குறித்து முதல்வர் அசோக் கெலாட் கூறுகையில்,’ ஜனநாயகத்தில் அனைவரையும் அழைத்துச் செல்வோர் வெற்றி பெறுவார்கள். பிரிவினைகளை உருவாக்குபவர்கள் ஒருபோதும் வெற்றி பெற முடியாது. அவர்கள் ஒருபோதும் கட்சிக்கு விசுவாசமாக இருப்பதில்லை. விசுவாசம் மிகவும் முக்கியமானது. நான் எப்போதும் அனைவரையும் அழைத்துச் செல்ல என் வாழ்க்கையில் முயற்சித்தேன். விசுவாசம், நேர்மை, அர்ப்பணிப்புடன் கட்சியின் கொள்கைகளை நிலைநிறுத்த உழைத்தேன். கோட்டைக் குறைப்பதற்குப் பதிலாக அதை நீட்டிக்க செய்தேன். யாராக இருந்தாலும் சரி, அவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் மற்றும் சோனியா காந்தியை எண்ணம் வேண்டும். அனைவரையும் மதித்து, கவுரவித்து, மக்களின் மனதை பிடித்து இந்த இடத்திற்கு நான் முன்னேறி இருக்கிறேன்’ என்றார்.

The post ராஜஸ்தான் முதல்வருக்கு தலைவலி ஊழலுக்கு எதிராக பாதயாத்திரை சச்சின் பைலட் தொடங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: