நெல்லை வரதராஜ பெருமாள் கோயிலில் தேர் திருவிழா: தேரை வடம் பிடித்து இழுத்து பக்தர்கள் சிறப்பு வழிபாடு

நெல்லை: நெல்லையில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் சித்திரை பிரமோற்சவத்தை முன்னிட்டு தேர் திருவிழா விமர்சியாக நடைபெற்றது. நெல்லை வீரராகவ புரத்தில் பழமையான திருத்தலங்களில் ஒன்றான வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இங்கு சித்திரை பிரமோற்சவமானது சித்திரை 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அது முதல் ஸ்ரீதேவி, மூதேவி, சமேதவ வரதராஜ பெருமாள் தினசரி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது. மலர் அலங்காரத்தில் தேரில் எழுந்தருளிய வரதராஜ பெருமாளை பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா முழக்கத்துடன் வடம்பிடித்து இழுத்தனர். பக்தர்கள் பவனியாக இழுத்து வந்த தேர் 4 ரத வீதிகள் வழியாக மீண்டும் நிலையத்தை வந்தடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

The post நெல்லை வரதராஜ பெருமாள் கோயிலில் தேர் திருவிழா: தேரை வடம் பிடித்து இழுத்து பக்தர்கள் சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Related Stories: