பள்ளிகளில் பணிபுரியும் உதவியாளர், இளநிலை உதவியாளர்களின் பணி நேரம் மாற்றம்: பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவு

சென்னை: பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் அல்லாத அமைச்சுப் பணியாளர்கள், உதவியாளர், இளநிலை உதவியாளர்களின் பணி நேரம் மாற்றம் செய்து அரசனை வெளியிட்டுள்ளனர். பணி நேரம் காலை 9 மணி முதல் மாலை 4.45 மணி வரை என மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கோடை விடுமுறை, பள்ளி விடுமுறை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை என வேலை நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. வருகை பதிவேட்டை முடித்தல், ஆசியர் விடுப்புகளை குறித்தல் உள்ளிட்ட பணிகளை செய்வதில் தொய்வு ஏற்படுவதால் மற்றம் செய்துள்ளனர்.

பள்ளிகளில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களின் வேலை நேரமானது காலை 10.00 மணி முதல் 5.45 மணி வரை உள்ளதால் பள்ளி வருகைப் பதிவேட்டை முடித்தல், ஆசிரியர்களின் விடுப்புகளை குறித்தல், பிற அலுவலகப் பணிகளை மேற்கொள்வதில் நிருவாக தொய்வு ஏற்படுவதாக தலைமை முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக்கல்வி ஆசிரியர்கள், அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

பள்ளியின் அலுவலக பணிகளை மேற்கொள்ளவும், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் வேலை நேரம் ஒருங்கிணைக்கப்பட வேண்டிய அவசியம் மற்றும் தேவை எழுகிறது. மேலும், அரசுப் பள்ளிகளின் நிர்வாக அமைச்சுப் பணியாளர்களின் பங்களிப்பு மேம்பாட்டிற்கு இன்றியமையாதது.

எனவே, அரசுப் பள்ளிகளின் நிருவாகத்தை செவ்வனே மேற்கொள்ள ஏதுவாக நிருவாக நலன் கருதி, அமைச்சுப் பணியில் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியரல்லாத பணியாளர்களான உதவியாளர், இளநிலை உதவியாளர்களின் வேலை நேரமானது காலை 9.00 மணி முதல் 4.45 மணி வரை மாற்றியமைத்து ஆணையிடப்படுகிறது.

மேலும், கோடை விடுமுறை மற்றும் பள்ளி விடுமுறைக் காலங்களில் ஆசிரியரல்லாத பணியாளர்களின் வேலை நேரமானது காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை அமையும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேற்காணும் ஆணையினை செயல்படுத்தவும், இச்செயல்முறைகளைப் பெற்றுக் கொண்டமைக்கான ஒப்புதலை உடன் அனுப்புமாறும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அந்த ஆணையில் குறிப்பிட்டுள்ளனர்.

The post பள்ளிகளில் பணிபுரியும் உதவியாளர், இளநிலை உதவியாளர்களின் பணி நேரம் மாற்றம்: பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: