ஆம்ஆத்மி எம்பி – நடிகைக்கு மே 13ல் நிச்சயதார்த்தம்

புதுடெல்லி: ஆம்ஆத்மி எம்பி ராகவ் சதா மற்றும் நடிகை பரிணிதி சோப்ரா திருமண நிச்சயதார்த்தம் மே 13ம் தேதி நடைபெறும் என்று தெரிகிறது. டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் ராகவ் சதா. இவர் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரும் நடிகை பரிணிதி சோப்ராவும் கடந்த சில மாதங்களாக ஒன்றாக வலம் வந்தனர்.

மேலும் இவர்கள் மேற்படிப்பை லண்டனில் படித்த போதும் நட்புடன் இருந்துள்ளனர். இதனால் அவர்கள் விரைவில் திருமணம் செய்யலாம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் ராகவ் சதா எம்பி மற்றும் நடிகை பரிணிதி சோப்ரா திருமண நிச்சயதார்த்தம் மே 13ம் தேதி மத்திய டெல்லியில் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. சுமார் 150 உறவினர்கள் மட்டும் இந்த விழாவில் பங்கேற்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

The post ஆம்ஆத்மி எம்பி – நடிகைக்கு மே 13ல் நிச்சயதார்த்தம் appeared first on Dinakaran.

Related Stories: