மத்திய பிரதேச மாநிலம் குணோ பூங்காவில் மேலும் ஒரு சிவிங்கி புலி உயிரிழப்பு..!!

மத்திய பிரதேசம்: மத்திய பிரதேச மாநிலம் குணோ பூங்காவில் மேலும் ஒரு சிவிங்கி புலி உயிரிழந்துள்ளதாக தலைமை வனப் பாதுகாவலர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த 1952 ஆம் ஆண்டு சிவ்விங்கிப் புலிகள் முற்றிலும் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, இப்புலிகளை இந்திய வனங்களில் மீண்டும் கொண்டு வருவதற்கு இந்திய அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வந்தது. அதன்படி, ஆப்பிரிக்காவிலுள்ள நமீபியா நாட்டில் இருந்து இந்தியாவுக்கு புலிகள் கொண்டுவர ஒப்பந்தம் போடப்பட்டது.

இதன்படி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17ம் தேதி தனது பிறந்த நாளை முன்னிட்டு ஐந்து பெண் மற்றும் மூன்று ஆண் சிவிங்கி புலிகளை வனப் பகுதிக்குள் பிரதமர் மோடி விடுவித்தார். 8 சிவிங்கி புலிகளில் ஒன்றான ஷாஷா பெண் புலி உயிரிழந்தது. இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் குணோ பூங்காவில் மேலும் ஒரு சிவிங்கி புலி உயிரிழந்துள்ளதாக தலைமை வனப் பாதுகாவலர் தகவல் தெரிவித்தார். ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்டத்தில் இதுவரை 3 சிவிங்கி புலிகள் உயிரிழந்துள்ளன.

The post மத்திய பிரதேச மாநிலம் குணோ பூங்காவில் மேலும் ஒரு சிவிங்கி புலி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: