சர்வதேச அளவில் இரண்டாவது நீண்ட விளையாட்டு நிகழ்வு: வெஸ்ட் மின்ஸ்டர் நாய் கண்காட்சி..!!

ஆல்பெனி: சர்வதேச அளவில் முக்கிய நாய் கண்காட்சிகளில் ஒன்றாகக் கருதப்படுவது வெஸ்ட் மின்ஸ்டர் நாய் கண்காட்சி. வெஸ்ட் மின்ஸ்டர் கென்னல் கிளப் சார்பாக நியூயார்க் நகரில் நடைபெறும் இந்த கண்காட்சியில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் பல்வேறு வகையான நாய்கள் இடம்பெற்றுள்ளது. நாய்களும் அவற்றின் கையாளுபவர்களும் அதன் தன்மைக்கு ஏற்ப ஏழு குழுக்களாகப் போட்டியிடுகின்றனர்.

விளையாட்டு, வேலை, டெரியர், வேட்டை நாய், பொம்மை, விளையாட்டு அல்லாத மற்றும் மேய்த்தல் ஆகிய திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக இந்த கண்காட்சி இருக்கும். ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் மத்தியில் ஒவ்வொரு நாயும் தனித்தனியாக தனது திறமையை வெளிப்படுத்தும் இந்த நிகழ்ச்சி காண்பவர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது.

உலகப் புகழ்பெற்ற இந்த நாய் கண்காட்சியில் தங்கள் நாயுடன் கலந்து கொள்வதையே கௌரவமாக நினைக்கும் நிலையில் இந்த போட்டியின் நடுவர்களாக இருந்து சிறந்த நாய்களை தேர்வு செய்வதென்பது அதைவிட கௌரவமாக கருதுபவர்களும் உண்டு. அந்த வகையில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனது நாய்களுடன் இந்த கண்காட்சியில் கலந்து கொண்டுவரும் நியூயார்க் நகரைச் சேர்ந்த டெட் யூபங்க் இந்த ஆண்டின் நடுவராக தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.

The post சர்வதேச அளவில் இரண்டாவது நீண்ட விளையாட்டு நிகழ்வு: வெஸ்ட் மின்ஸ்டர் நாய் கண்காட்சி..!! appeared first on Dinakaran.

Related Stories: