மேகாலயாவில் ஆளும் கட்சியுடன் மக்கள் ஜனநாயக கட்சி ஐக்கியம்

ஷில்லாங்: மேகாலயாவில் என்பிபி கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக கான்ராட் சங்மா இருந்து வருகிறார். இந்நிலையில் ஆளும் என்பிபி கட்சியில், மக்கள் ஜனநாயக கட்சி(பிடிஎப்) நேற்று இணைந்தது. இந்த கட்சிக்கு சட்டமன்றத்தில் 2 எம்எல்ஏக்கள் உள்ளனர். பிடிஎப் கட்சி சேர்ந்துள்ளதன் மூலம் 60 உறுப்பினர்களை கொண்ட சட்டமன்றத்தில் ஆளும் கட்சியின் பலம் 28 ஆக உயர்ந்துள்ளது. அசாம் உடனான எல்லை பிரச்னைக்கு தீர்வு மற்றும் அரசியல் சட்டத்தின் 8 வது அட்டவணையில் காசி மொழியை சேர்ப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக என்பிபி கட்சி உறுதி அளித்துள்ளதாக பிடிபி கட்சி செயல் தலைவர் லிங்டோ தெரிவித்தார்.

The post மேகாலயாவில் ஆளும் கட்சியுடன் மக்கள் ஜனநாயக கட்சி ஐக்கியம் appeared first on Dinakaran.

Related Stories: