இம்முறை கோடை விழாவை முன்னிட்டு தமிழகத்தில் இருந்தும், வெளி மாநிலத்தில் இருந்தும் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். அவர்களை மகிழ்விக்க தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் 1 லட்சம் மலர் நாற்றுகளை பூங்கா முழுவதிலும் நடவு செய்துள்ளனர்.
சீசன் நெருங்கிய நிலையில், தற்போது டேலியா செடிகளில் மலர்கள் பூத்துள்ளன. அடுத்த மாதம் 2வது வாரத்திற்கு மேல் அனைத்து செடிகளிலும் மலர்கள் பூக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, பல வண்ணங்களில் டேலியா மலர்கள் உட்பட பல வகையான மலர்கள் பூத்துக் குலுங்குவதால், சுற்றுலா பயணிகள் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
The post அண்ணா பூங்காவில் பூத்து குலுங்கும் டேலியா மலர்கள் appeared first on Dinakaran.
