தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் அச்சிறுப்பாக்கத்தில் 40வது வணிகர் தின மாநாடு: த.வெள்ளையன் துவக்கி வைத்தார்

சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில், 40வது வணிகர் தின விழாவை முன்னிட்டு, சில்லறை வணிகர் உரிமை மீட்பு மாநாடு அச்சிறுப்பாக்கத்தில் இன்று காலை நடந்தது. முன்னதாக, மாநாட்டுக்கான கால்கோள் விழா கடந்த மாதம் 5ம் தேதி நடந்தது. பின்னர் பிரமாண்ட மேடை, விளம்பர பதாகை மற்றும் பந்தல் தோரணங்கள் அமைக்கப்பட்டு மாநாடு விழாக்கோலம் பூண்டது. இந்நிலையில் இன்று காலையில் தொடங்கிய மாநாட்டை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் த.வெள்ளையன், சங்க கொடியை ஏற்றி வைத்து துவக்கி வைத்தார். பின்னர் மாநாட்டுக்கு தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ஆ.பாஸ்கரன் முன்னிலை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் சௌந்தர்ராஜன் வரவேற்றார்.

இதில் மாநில நிர்வாகிகள் தேவராஜ், சௌந்தர்ராஜன், பீர்முகமது, ராமநாதன், பாலகிருஷ்ணன், கருப்பையா, மெஸ்மர் கந்தன், செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் வேலு, மாவட்ட தலைவர்கள் சந்தானம், கிருஷ்ணகுமார், துரைமாணிக்கம், ராஜாராம், டேவிட்சன், ராஜபாண்டியன், சண்முகம், பொன்பாண்டி, கண்ணன், பாபு, ராஜேந்திரன், அச்சிறுப்பாக்கம் வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் ஏகாம்பரம், மாவட்ட நிர்வாகிகள் ரவிச்சந்திரன், யாசின் முகமது, வேல்முருகன், சாகுல் ஹமீத், வெங்கடேசன், ஆனந்தன், கதிரேசன், அரிபுத்திரன், பாலாஜி, ஜலால், ரத்தினவேலு, பரமேஸ்வரன், நிஜாமுதீன், சுரேஷ், கிருஷ்ணன், சீனு உள்பட பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை அச்சிறுப்பாக்கம் பகுதி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சிறப்பாக செய்திருந்தது. முன்னதாக, மாநில தலைவர் த.வெள்ளையனை அச்சிறுப்பாக்கம் பகுதி ஜிஎஸ்டி சாலையில் இருந்து குதிரையில் மாநாட்டுக்கு ஊர்வலமாக அழைத்து வந்தனர்.

The post தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் அச்சிறுப்பாக்கத்தில் 40வது வணிகர் தின மாநாடு: த.வெள்ளையன் துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: