முறப்பநாடு விஏஓ கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது: மாவட்ட ஆட்சியர் அதிரடி

தூத்துக்குடி: முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக இருந்த லூர்து பிரான்சிஸ் என்பவர் கடந்த மாதம் 25ம் தேதி தனது அலுவலகத்திலேயே மணல் கொள்ளையர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து லூர்து பிரான்சிஸ் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒரு கோடி ரூபாய் நிவாரணம் அறிவித்தார். அத்துடன் புறநகர டி.எஸ்.பி. சுரேஷ், சிறப்பு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் விஏஓ கொலை வழக்கில் முக்கிய கொலையாளியான ராமசுப்பு மற்றும் மாரிமுத்து ஆகிய இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணன், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். பரிந்துரையை ஏற்று மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில்ராஜ், விஏஓ கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள ராமசுப்பு, மாரிமுத்து ஆகிய இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.

The post முறப்பநாடு விஏஓ கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது: மாவட்ட ஆட்சியர் அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: