ஊட்டியில் குவியும் சுற்றுலா பயணிகள்

ஊட்டி: தமிழகத்தில் கடந்த 4ம் தேதி அக்னி நட்சத்திரம் துவங்கியது. இதனால் தமிழகம் முழுவதும் வெயில் சுட்டெரிக்கிறது. தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கோடை மழை பெய்து வந்தாலும், பெரும்பாலான மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் சுற்றுலா நகரமான ஊட்டியில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் மேகமூட்டத்துடன் கூடிய குளு குளு காலநிலை நிலவி வருகிறது.

மேலும் கோடை விழா துவங்கியுள்ள நிலையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டியில் முகாமிட்டுள்ளனர். இந்நிலையில் சமவெளி பகுதிகள் மற்றும் கேரளா, கர்நாடகா மாநிலங்களில் வெயில் சுட்டெரித்து வருவதால் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வரும் நாட்களில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஊட்டியின் நேற்று வெப்பநிலை அதிகபட்சம் 20 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்சம் 8 டிகிரி செல்சியசும் நிலவியது.

Related Stories: