2022-23 நிதி ஆண்டில் ரூ.1,085 கோடி வருவாய் சென்ட்ரல் ரயில் நிலையம் முதலிடம்

சென்னை: ரயில்வே துறையில் 2022-23 ஆம் நிதி ஆண்டில் கிடைத்த வருவாய் விவரங்களை கடந்த வாரம் ரயில்வே அமைச்சகம் வெளியிட்டது. அதன்படி, ரயில்வே வருவாய் 2.40 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 25 சதவீதம் அதிகம் ஆகும். 2022-23ம் நிதி ஆண்டில் ரயில்வே கிடைத்த வருவாய் விவரங்களை கடந்த வாரம் மத்திய ரயில்வே அமைச்சகம் வெளியிட்டது. அதன்படி, ரயில்வே வருவாய் 2.40 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 25 சதவீதம் அதிகம் ஆகும். அதேபோல், தெற்கு ரயில்வேயில் உள்ள ரயில் நிலையங்களில் வருவாய் குறித்த விவரங்கள் வெளியாகி இருக்கிறது.

அதன்படி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் 1,085 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி முதலிடத்தில் உள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையம் ரூ.523 கோடி வருவாய் நீட்டி 2ம் இடத்தில் உள்ளது. 283 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி கோவை ரயில் நிலையம் 3ம் இடத்தையும் பிடித்துள்ளது. நெல்லை ரயில் நிலையம் 111 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி இந்த வரிசையில் 12வது இடத்தில் இருக்கிறது. தூத்துக்குடி, திருச்செந்தூர் ஆகிய இடங்களுக்கு போதிய ரயில்கள் இல்லாததால் தூத்துக்குடி மாவட்ட மக்களும் அதிக அளவில் நெல்லைக்கு வரும் ரயிலையே பயன்படுத்துகின்றனர்.

இதனால், நெல்லை ரயில் நிலையத்தின் வருவாய் கணிசமாக உயர்ந்து இருக்கிறது. தற்போது 100 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டி இருப்பதால் என்எஸ்ஜி 3 பிரிவில் இருந்து, என்எஸ்ஜி 2 பிரிவுக்கு தரம் உயர்த்துவதற்கான தகுதியை நெல்லை ரயில் நிலையம் பெற்றுள்ளது, என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. என்.எஸ்.ஜி 2 பிரிவுக்கு தரம் உயர்த்தப்பட்டதால் நடைமேடை உள்ளிட்டவை விரிவாக்கம், ரயில் நிலைய மேம்பாடு என பல்வேறு புதிய வசதிகள் கிடைக்கும். எனவே, நெல்லை ரயில் நிலையத்தை என்எஸ்ஜி 2 பிரிவுக்கு மாற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் ரயில் பயணிகள் மத்தியில் எழுந்துள்ளது.

The post 2022-23 நிதி ஆண்டில் ரூ.1,085 கோடி வருவாய் சென்ட்ரல் ரயில் நிலையம் முதலிடம் appeared first on Dinakaran.

Related Stories: