சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி

 

வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் உள்ளது. இந்த கோயிலில் அமாவாசை பவுர்ணமிக்கு தலா மூன்று நாட்கள் பிரதோஷத்திற்கு இரண்டு நாட்கள் என மாதத்திற்கு எட்டு நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. இந்நிலையில் வரும் மே 3ம் தேதி தொடங்கி மே 6ம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

மேலும் சித்திரைமாத பிரதோசத்தையொட்டி சுந்தர மகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர் இளநீர் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்கள் நடைபெறும். அதனை தொடந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிப்பார். இதில் சித்திரை மாத பவுர்ணமிக்கு பக்தர்கள் கூட்டம் மிகவும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் முகம் கவசம் அணிந்து வர வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நான்கு நாட்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுந்தர மகாலிங்கம் சாமி பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்துள்ளனர்.

The post சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: