பர்ஹானா படத்தை திரையிடாமல் தடுக்க வேண்டும் எஸ்பியிடம், தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு மனு

 

திருவாரூர்: தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு மாவட்ட தலைவர் பீர்முகமது, மாவட்ட செயலாளர் இஸ்மத் பாட்சா, பொருளாளர் முகமது சலீம் மற்றும் பொறுப்பாளர்கள் எஸ்.பி சுரேஷ்குமாரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, சமீப காலமாகச் சங்பரிவாரச் சிந்தனை கொண்டவர்கள் அமைதிப் பூங்காவான தமிழகத்தில் மத ரீதியான பிரச்னைகளை உருவாக்கத் திரைப்படங்களை எடுத்துத் திரையிட்டு வருகிறார்கள். இதற்குப் பெரும் தொகைகளைச் செலவிட்டும் வருகின்றனர். மனித நேயமற்ற மத வெறுப்பு சிந்தனைக்கு உடந்தையாகத் திரைப்பட இயக்குநர்களும், நடிகர்களும் இருப்பது மிகப்பெரும் வேதனையாக உள்ளது.

இதை ஆளும் அரசு இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும். இவர்கள்மீது எடுக்கப்படும் கடுமையான நடவடிக்கைகள் தான் அடுத்து உள்ளவர்களுக்கும் இதுபோல் ஈடுபட விடாமல் தடுக்கும். சமீபத்தில் ஓடிடி மூலம் வெளியிடப்பட்ட புர்கா என்ற திரைப்படம் இஸ்லாமியக் கோட்பாடுகளைக் கடுமையாகத் தாக்கி எடுக்கப்பட்டிருந்தது. எனவே பர்ஹானா படத்தைத் திரையிடாமல் தடுக்க வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பர்ஹானா படத்தை திரையிடாமல் தடுக்க வேண்டும் எஸ்பியிடம், தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு மனு appeared first on Dinakaran.

Related Stories: