செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமி கோயிலில் சித்திரை பூஜை திருவிழா இன்று தொடக்கம்

 

உடன்குடி: செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமி கோயில் சித்திரை பூஜை திருவிழா இன்று கஞ்சி பூஜையுடன் தொடங்குகிறது. உடன்குடி அருகேயுள்ள ஐந்துவீட்டு சுவாமி திருக்கோயிலில் சித்திரை பூஜை பெருந்திருவிழா 8நாள் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு திருவிழா இன்று (30ம் தேதி) இரவு 7மணிக்கு கஞ்சி பூஜையுடன் தொடங்குகிறது. தொடர்ந்து, மே 1ம் தேதி நண்பகல் 12மணி, இரவு 7மணிக்கு சிறப்பு பூஜையும், 10மணிக்கு சுவாமிகளுக்கு மேக்கட்டி கட்டுதல், மறுநாள் அதிகாலை 3மணிக்கு மேக்ககட்டி பூஜையும் நடக்கிறது.

திருவிழா தொடங்கியதும் ஏராளமான பக்தர்கள் கோயில் வளாகத்தில் தங்கியிருந்து சுவாமி தரிசனம் செய்வர். தினமும் காலை 7.30முதல் இரவு 10மணி வரை முழு நேர சிறப்பு பூஜை நடக்கிறது. மே 2ம்தேதி இரவு 7மணிக்கு கிராமிய பல்சுவை நிகழ்ச்சி, 3ம்தேதி இரவு 7மணிக்கு இன்னிசை நிகழ்ச்சி, பட்டிமன்றம், 5ம்தேதி மாலை 5மணிக்கு சொற்பொழிவு, இரவு 7மணிக்கு இன்னிசை நிகழ்ச்சி, 6ம்தேதி பகல் 11மணிக்கு அன்னதானம் நடக்கிறது.

மாலை 3மணிக்கு அன்னமுத்திரி சிறப்பு பூஜையை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னமுத்திரி பிரசாதம் வழங்கப்படுகிறது. 7ம்தேதி இரவு 7மணிக்கு கும்பாபிஷேகத்துடன் திருவிழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையின் தூத்துக்குடி மண்டல இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் சங்கர், ஆய்வாளர் பகவதி, கோயில் தக்கர் ராமசுப்பிரமணியன், செயலாளர் ஜெயந்தி மற்றும் கோயில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

The post செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமி கோயிலில் சித்திரை பூஜை திருவிழா இன்று தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: