அரசு கலைக்கல்லூரியில் ஆண்டு விழா

 

உடுமலை, ஏப்.27: உடுமலைப்பேட்டை அரசு கலைக்கல்லூரியில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சோ.கி. கல்யாணி தலைமை ஏற்று தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவர் ஆடிட்டர் எஸ்.கண்ணன் மற்றும் பொருளாளர் ஆடிட்டர் எஸ்.ஜோசப் ஆகியோர் முன்னிலை வகித்து ஒலிம்பிக் தீபத்தையும், கல்லூரி கொடியையும் ஏற்றி வைத்தனர். விளையாட்டு போட்டிகளை ஆடிட்டர் கந்தசாமி தொடங்கி வைத்தார்.

மாணவர் பேரவை தலைவர் சதீஷ்குமார் வரவேற்றார். கல்லூரி விளையாட்டு அறிக்கையை உடற்கல்வி இயக்குநர் மனோகர் செந்தூர் பாண்டி வாசித்தார். சிறப்பு விருந்தினரை கணிதவியல் துறைத்தலைவர் பேராசிரியர் பொன்முடி அறிமுகம் செய்து வைத்து பேசினார். சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி மாவட்டம், நாகலாபுரம், அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வர் மேஜர் உ.பெ.ராமலிங்கம் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி, பல்வேறு பாடப்பிரிவுகளில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார்.

மாணவர்கள் இடையே தன்னம்பிக்கையூட்டும் வகையில் பேசினார். திருப்பூர் தடகள சங்க தலைவர் மற்றும் தமிழ்நாடு தடகள சங்க துணை தலைவர் ஆர்.பி.ஆர்.சண்முகசுந்தரம் வாழ்த்தி பேசி, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளையும் வெற்றி கோப்பைகளையும் வழங்கினார். முடிவில் விளையாட்டுத்துறை செயலர் மாணவன் காமராஜ் நன்றி கூறினார்.

The post அரசு கலைக்கல்லூரியில் ஆண்டு விழா appeared first on Dinakaran.

Related Stories: