மங்களூருவில் காங்கிரஸ் தலைவர் வீட்டில் ஐடி ரெய்டு

மங்களூரு: தென்கனரா மாவட்ட காங்கிரஸ் துணை தலைவராக இருப்பவர் கங்காதர் கவுடா. இவரது மகன் ரஞ்சன் கவுடா. இவர்கள் வீடு மங்களூரு பெலதங்கடி தாலுகாவில் அமைந்துள்ளது. கர்நாடக மாநில முன்னாள் அமைச்சர் கங்காதர் கவுடாவுக்கு சொந்தமான பிரசன்னா கல்வி நிறுவனங்கள், இன்டபெட்டுவில் உள்ள இவருக்கு சொந்தமான மற்றொரு வீட்டில் நேற்று வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட கங்காதர் கவுடா முயற்சி மேற்கொண்டார். ஆனால் அவருக்கு டிக்கெட் மறுக்கப்பட்டு பெலதங்கடி தொகுதியில் ரக்‌ஷித் சிவராம் என்பவரை வேட்பாளராக அறிவித்தனர். இதனால் விரக்தியடைந்த கங்காதர் கவுடா அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து விலகியது குறிப்பிடத்தக்கது.

The post மங்களூருவில் காங்கிரஸ் தலைவர் வீட்டில் ஐடி ரெய்டு appeared first on Dinakaran.

Related Stories: