கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பூத்துக்குலுங்கும் ரோஜா மகிழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்

கொடைக்கானல்: கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பூத்துக்குலுங்கும் பல வகையான வண்ண, வண்ண மலர்களை பார்த்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்து வருகின்றனர். மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் தற்போது கோடை சீசன் களைகட்டியுள்ளது. பல்வேறு நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். வெயிலில் இருந்து தப்பித்து குளுமையைத் தேடி கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு குளிர்ச்சியை கொடுத்து இளவரசி கிளர்ச்சியூட்டி வருகிறாள்.

Advertising
Advertising

தற்போது பிரையண்ட் பூங்காவில் பூத்துக் குலுங்கும் வண்ண, வண்ண மலர்களும், விதவிதமான பூக்களும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தி வருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் வண்ண, வண்ண பூக்களைக் கண்டு அதன் முன்னே நின்று புகைப்படம் எடுத்தும், செல்பி எடுத்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

பல வகையான ரோஜா, டெய்சி, டெல்பீனியம், டையந்தாஸ், கிளாடியஸ், ப்ளாக்ஸ், சால்வியா, பெல்கோனியம், பால்சம், செலோசியா, கேலண்டுல்லா, ஆஸ்டர், அஸ்டமேரியா, டேலியா, மேரிகோல்டு, பேன்ஸி, ஆந்தூரியம், ஆன்ட்ரீனியம் உள்ளிட்ட பல வகையான மலர்கள் பிரையண்ட் பூங்கா முழுவதும் மலர்ந்து சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து வருகிறது. கோடைமழை அவ்வப்போது பெய்து சுற்றுலாப் பயணிகளை மகிழ்வித்து வருவதால் இரட்டிப்பு மகிழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள் உள்ளனர்.

Related Stories: