இந்த மீம்ஸை பிரபல பாலிவுட் நடிகை கங்கனா, தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார். அதில், ‘ஹ்ம்ம், இருவருக்கும் ஒரேவிதமான நோய் உள்ளது’ என்று பதிவிட்டிருந்தார். கங்கனாவின் இந்த பதிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மும்பையில் உள்ள அவரது அலுவலகத்திற்கு வெளியே சிலர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுதொடர்பாகவும் மற்றொரு வீடியோவை கங்கனா பகிர்ந்துள்ளார்.
அதில், ‘பாலியில் உள்ள எனது அலுவலகத்திற்கு வெளியே புத்த சித்தாந்தக் குழுவைச் சேர்ந்த சிலர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். நான் பகிர்ந்த மீம்ஸ் மூலம் யாருடைய மனதையும் புண்படுத்த விரும்பவில்லை. ஜோ பிடனுக்கும் தலாய் லாமாவுக்கும் இடையிலான நட்பைப் பற்றிய நகைச்சுவை பதிவாகும். என்னுடைய உணர்வுகளை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். புத்தரின் போதனைகளை நம்புகிறேன். தலாய் லாமா மக்களுக்கு பல வகைகளில் சேவை செய்கிறார்.
அதற்காக அவருக்கு சல்யூட். என்னுடைய மனதில் யாரை பற்றியும் எவ்வித கெட்ட எண்ணமும் இல்லை. தயது செய்து இந்த வெயிலில் நிற்காமல், வீட்டிற்கு சென்று ஓய்வெடுங்கள்’ என்று பதிவிட்டுள்ளார். கங்கனாவின் இந்த பதிவைப் பார்க்கும்போது, அவர் நகைச்சுவையாக பதிவிட்ட மீம்ஸ் தர்ணா வரை சென்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post தலாய் லாமா – ஜோ பிடனை ஒப்பிட்டு ‘மீம்ஸ்’ போட்ட கங்கனாவின் ஆபீஸ் முற்றுகை: காமெடி பதிவால் நடிகைக்கு வந்த சோதனை appeared first on Dinakaran.