சமுதாயத்தில் சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்க உணர்வுகளை மேம்படுத்த ரம்ஜான் திருநாளில் உறுதி: நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் ரம்ஜான் வாழ்த்து

டெல்லி: சமுதாயத்தில் சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்க உணர்வுகளை மேம்படுத்த ரம்ஜான் திருநாளில் உறுதி எடுப்போம் என்று குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ராஷ்டிரபதி பவன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:
ஈத் புனித ரமலான் மாதத்தின் முடிவைக் குறிக்கிறது. இந்த பண்டிகை அன்பு, இரக்கம் மற்றும் பாசம் போன்ற உணர்வுகளை பரப்புகிறது. ஈத் ஒற்றுமை மற்றும் பரஸ்பர நல்லிணக்கத்தின் செய்தியை வழங்குகிறது. சமுதாயத்தில் சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்க உணர்வுகளை மேம்படுத்த இந்த நாளில் உறுதிமொழி எடுப்போம்.

ஈத்-உல்-பித்ரின் புனிதமான சந்தர்ப்பத்தில், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வாழும் அனைத்து குடிமக்களுக்கும், குறிப்பாக நமது இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சமுதாயத்தில் சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்க உணர்வுகளை மேம்படுத்த ரம்ஜான் திருநாளில் உறுதி: நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் ரம்ஜான் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: