வன்னியர்களுக்கு 10.5% உள்இட ஒதுக்கீடை நிறைவேற்ற வேண்டும் பாட்டாளி மக்கள் கட்சியினர் முதலமைச்சருக்கு கடிதம்

 

திருப்பூர்,ஏப்.22: வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இட ஒதுக்கிடு மே 31 ஆம் தேதிக்குள் நிறைவேற்ற வலியுறுத்தி திருப்பூர் மாநகர மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் தமிழக முதலமைச்சருக்கு திருப்பூர் ரயில் நிலையம் எதிரே உள்ள தபால் நிலையத்திலிருந்து கடிதம் அனுப்பியுள்ளனர். பாட்டாளி மக்கள் கட்சியினர் முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:தமிழ்நாட்டில் மிகவும் பின்தங்கிய நிலையில் வன்னியர்கள் வாழ்ந்து வருவதாகவும் 2020- 21 ஆம் ஆண்டில் மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு 10.5 சதவீதம் வன்னியர் உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதாகவும் அதற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்த நிலையில் உச்ச நீதிமன்றம் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை என தீர்ப்பளித்துள்ளது. இந்த கல்வி ஆண்டிலேயே வன்னியர்களுக்கு நியாயமான கோரிக்கையான 10.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு கூறியிருந்தனர். இந்த நிகழ்ச்சிக்கு பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாலர் ரமேஷ் தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் கோவிந்தராஜ், மாவட்ட தலைவர் முரளி, மாவட்ட தொழிற்சங்க தலைவர் கார்த்தி, நகர செயலாளர் ரவி, வன்னியர் சங்க மாவட்ட தலைவர் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post வன்னியர்களுக்கு 10.5% உள்இட ஒதுக்கீடை நிறைவேற்ற வேண்டும் பாட்டாளி மக்கள் கட்சியினர் முதலமைச்சருக்கு கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: